இப்போது கடலூரில் நிவாரணப் பணிகளில் ''உண்மையான சூப்பர் ஸ்டார்'' சித்தார்த்
சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஏராளமான நடிகர்கள் சிலர் ஈடுபட்டுள்ளார்கள். நடிகர் சித்தார்த் சென்னையில் ஓரளவிற்கு நிவாரண பணிகளை மேற்கொண்ட நடிகர் சித்தார்த் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து வருகிறார்.
கடலூரில் வெள்ளத்தில் சிக்கி கண்ணீரில் தவிக்கும் மக்கள் சரியான அளவில் நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அங்கு பெய்து வரும் தொடர் கனமழையால், ஆறுகளில் 50000 கனஅடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்க, பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தவித்து வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் கடலூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் மாநில அரசும் மத்திய அரசும் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சமூகவலைத்தளங்கள் வழியாக நடிகர்களும் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தியுள்ளார்கள்.
நடிகர் சித்தார்த்தும் ஆர்ஜே பாலாஜியும் முழுமூச்சுடன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவது பலரும் பாராட்டும் வண்ணம் உள்ளது.
|
மழையில் நிவாரணம்
மழை வெள்ளம் பார்க்காமல் தண்ணீரில் மிதந்தும் நீந்தியும் சென்று உதவிய வகையில் உயர்ந்து நிற்கிறார்கள் நடிகர் சித்தார்த்தும், ஆர்.ஜே.பாலாஜியும். வாட்ஸ் ஆப் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிப்பொருட்கள், உணவுகளை ஓரிடத்தில் சேகரித்து அவற்றை இன்று வரை பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று விநியோகம் செய்து வருகிறார்கள்.
|
நடிகர் சித்தார்த்
கனமழை காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாக டுவிட்டரில் தெரிவித்த சித்தார், தனது வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் அதனால் வீட்டின் மாடியில் தஞ்சம் அடைந்ததாகவும், தமிழ் நாட்டை கடவுள் காப்பாற்றவேண்டும் என்றும்
தெரிவித்தார். வசதியான தனது வீடே இப்படி என்றால் நடுத்தர, ஏழை மக்களின் நிலை எப்படி என்பதை நினைத்து பார்க்கவே சிரமமாக இருப்பதாக கூறிய சித்தார் தொடர்ந்து நிவாரணப்பணியில் ஈடுபட்டார்.
|
ஆர்.ஜே. பாலாஜி
டுவிட்டர் வழியாக சென்னை மக்களுக்கு உதவுகிறவர்களை ஒருங்கிணைந்து சித்தார்த்தும் ஆர்.ஜே.பாலாஜியும் ஓய்வில்லாமல் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, பாய், தண்ணீர் பாட்டில்கள், உடைகள் என அனைத்தையும் பலருடைய உதவியுடன் வழங்கி வருகிறார்கள்.
|
வதந்திகளை நம்பாதீர்கள்
நடிகர் சித்தார் இப்போது கடலூரில் நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ளார். கடலூர் மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. சுனாமி, தானே புயல் என கடலூர் மாவட்ட மக்களை தாக்கியும், அதிலிருந்து மீண்டு வந்தனர். நான் கடலூரில் உள்ள சித்தார்த் உடன் பேசியுள்ளேன் மக்கள் விரைவில் துயரத்தில் இருந்து மீள்வார்கள் என்று கூறியுள்ளார்
|
சித்தார்த் கோரிக்கை
கடலூர் மக்களுக்கு இப்போதைய தேவை பணம் கூட இல்லை. ஒரு பால்பாக்கெட்டோ, ஒரு வாட்டர் பாக்கெட்டோதான். வெள்ளத்தில் சிக்கி உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு படுக்க பாயும், ஒரு போர்வையும்தான். எனவே இவற்றை கொடுங்கள் என்று கேட்டுள்ளார்
தனது பெயருக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக்கொள்ளும் பல நடிகர்களுக்கு மத்தியில் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவும் சித்தார்த் போன்ற நடிகர்கள்தான் நிஜ சூப்பர்ஸ்டார்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications