நடிகர் சங்கத் தேர்தல்... சரத்குமார் அணியில் துணைத்தலைவராக சிம்பு போட்டி
சென்னை : நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியின் சார்பில் சிம்பு துணைத் தலைவராகப் போட்டியிடுகிறார்.
சென்னையில் சரத்குமார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிம்பு துணைத் தலைவராக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது தலைவராக இருக்கும் சரத்குமாரை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர்.
இதற்காக இரண்டு அணிகளும் நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் குறித்து சரத்குமார் தலைமையில் இன்று தி.நகரில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, ராம்கி, சிம்பு, ஷாம், விஜயகுமார், பப்லு, நடிகைகள் ராதிகா, மும்தாஜ், நீலிமா ராணி, பாத்திமா பாபு, நிரோஷா உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிம்பு துணைத் தலைவராக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
பின்னர் பேசிய நடிகர் சிம்பு சரத்குமார் தலைமையிலான அணிதான் நடிகர்களுக்காகப் பாடுபடும் அணி என்றும், நடிகர் சங்கத் தேர்தலில் உண்மைதான் வெற்றிபெறும் எனவும் கூறினார்.
கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார் இருந்து வருகிறார்.
நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூர் செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications