நாங்க புதுசா கட்டிக்கிட்ட... சிங்கமுத்து ஜிலீர் பிரசாரம்!
கரூர்: கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக காமெடியன் சிங்கமுத்து, நாங்க புதுஸ்ஸா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்று நரிக்குறவர்கள் காலனியில் பாட்டுப் பாடி பிரசாரம் செய்தார்.
கரூரில் பல்வேறு சினிமா ஸ்டார்களும் தொடர்ந்து பிரசாரம் செய்த வண்ணம் உள்ளனர்.
சமீபத்தில் விந்தியா, ராஜேந்திரநாத் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். இந்த வரிசையில் தற்போது அதிமுக வேட்பாளர் தம்பித்துரைக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து பிரசாரம் செய்தார்.

நரிக்குறவர் காலனியில்
நரிக்குறவர் காலனியில் அவர் வாக்கு சேகரித்தபோது, நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிகிட்ட ஜோடிதானுங்க.. என்ற பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.

கோடி கோடியா கொள்ளை
பின்னர் வேறு இடத்தில் அவர் பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், திமுக அங்கம் வகித்து காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கனிம வளம் கோடி, கோடியாக கொள்ளையடிக்கப்பட்டது.

சீர்குலைஞ்சு போச்சே பொருளாதாரம்
இந்த ஊழல், கொள்ளை காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்தது.

வாழ வைத்தவர் ஜெ.
தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களையும் வாழ வைத்து வருகிறார்.

ஜெ. மட்டும் பிரதமராகி விட்டால்
இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெயலலிதா இந்திய பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications