‛லீ குவான் யூ’.. கும்பகோணத்தில் கம்பீரமாக உருவான சிங்கப்பூர் மாஜி பிரதமரின் சிலை.. சுவாரசிய பின்னணி
கும்பகோணம்: சிங்கப்பூரை வடிவமைத்த சிற்பி என போற்றப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் சிலை கும்பகோணத்தில் செதுக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 150 கிலோ எடை, 6 அடி உயரத்தில் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெண்கல சிலை எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது? சிலை சொன்னது யார்? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ. இவர்தான் அந்த நாட்டின் நீண்ட காலம் பிரதமராக பொறுப்பு வகித்தவர். கடந்த 1959 முதல் 1990 வரை சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். இவரது திட்டங்கள், செயல்பாடு தான் சிங்கப்பூரை உலக தரத்துக்கு மாற்றியது. இதனால் சிங்கப்பூரை வடிவமைத்த சிற்பி என்றே லீ குவான் யூ-வை கூறலாம்.

அதோடு சிங்கப்பூருக்கும், தமிழர்களுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஏனென்றால் சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் இருந்தாலும் தமிழர்களும் கணிசமாக உள்ளனர். அதோடு அந்த நாட்டில் தமிழ் என்பது அரசு அங்கீகரித்த மொழிகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக லீ குவான் யூ தனது பதவிக்காலத்தில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
சிங்கப்பூரில் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் பெரிதும் உறுதுணையாக செயல்பட்டவர். இதனால் தான் லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் அதிக முக்கியத்துவம் உள்ளது. இவர் கடந்த 2015 மார்ச் 23ம் தேதி காலமானார். ஆனாலும் கூட அவர் தமிழர்கள் அவரது பிறந்தநாள், நினைவு நாள் கடைப்பிடிப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருவலஞ்சுழியில் 150 கிலோ எடையில், 6 அடி உயரத்தில் லீ குவான் யூ-வின் வெண்கல சிறை கம்பீரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கருணாநிதி சிங்கப்பூரில் தொழிலதிபராக உள்ளார். இவர் லீ குவான் யூ-வுக்கு சிலை செய்து சிங்கப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் நிறுவ முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பகுதியில் சிலை செய்ய ஆர்டர் கொடுத்தார். இந்த பகுதியில் கோவில்களுக்கு தேவையான ஐம்பொன் சிலைகள் தயார் செய்யும் சிற்பிகள் அதிகம் உள்ளனர். இந்நிலையில் தான் தொழிலதிபர் கருணாநிதி, லீ குவான் யூ-வின் சிலையை உருவாக்கும் பணியை சாய் கணேஷ் சிற்பக் கூட ஸ்தபதிகளான வேதா இராமலிங்கம் மற்றும் அவரது மகன் வேதாச்சலம் ஆகியோரிடம் வழங்கினார்.
இதையடுத்து லீ குவான் யூ-வின் சிலை செய்யும் பணி தொடங்கியது.மிகவும் நுட்பமாகவும், லீ குவான் யூ-வின் உருவத்தை தத்ரூபமாகவும் பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை செதுக்கப்பட்டது. தற்போது சிலை செதுக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது. 6 மாதம் நடந்த பணி தற்போது நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் உள்ள தொழிலதிபர் கருணாநிதியின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இந்த சிலை சிங்கப்பூருக்கு கொண்டு சென்று நிறுவப்பட உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications