For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை சென்னையில் நடக்கும் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் சந்திப்பு நாளை சென்னையில் நடைபெறுகிறது.

விபத்தினாலோ, பிற காரணங்களாலோ தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற நோக்கில் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு (SIPA) செயல்படுகின்றது. இதன் செயல்பாடுகளில் ஒன்றாக ஒவ்வொரு ஆண்டும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோரின் சந்திப்பு பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது.

எஸ்.ஐ.பி.ஏ.வின் 4வது ஆண்டு சந்திப்பு நாளை(13.9.2014) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். வித்யா சாகர், 1, ரஞ்சித் சாலை, கோட்டூர்புரம், சென்னை (அண்ணா நூற்றாண்டு நூலகம்பின்புறம்) என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் மறுவாழ்வு நல மருத்துவர், இயல்/செயல்நிலை மருத்துவர்கள், சமூகப் பணியாளர் ஆகியோர் பங்கேற்கும் மருத்துவ முகாம் நடைபெறும். இத்துடன் அல்ட்ரா ஸ்கேன், ரத்தப் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை ஆகியவையும் நடைபெறும்.

இறுதியாக, தண்டுவடம் காயமடைந்தோருக்கான மனமகிழ் நிகழ்ச்சிகள் நடைபெறும். இறுதியாக அவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

தங்கள் பகுதியில் வசிக்கும் அல்லது தாங்கள் அறிந்த தண்டுவடம் காயமடைந்தோரை இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்யுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

English summary
Spinal Injured Persons Association (SIPA) has arranged for an annual get-together in Chennai on september 13th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X