Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடிவேல் பட பாணியில் 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சீர்காழி பெண்! பலே கில்லாடி சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை காவல் துறை கைது செய்துள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை தெருவைச் சேர்ந்தவர் ஜீவா மகனின் சிவசந்திரன். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

crime sirkali

சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது நித்திலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தான் டாக்டராக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வேலை பார்த்து வருவதாக சிவசந்திரனிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி சீர்காழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிவசந்திரன் - நித்திலாவுக்கு முறைப்படி திருமணம் நடந்தது.

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. இதைக் கண்ட சீர்காழி அருகே புத்தூர் வாய்க்காங்கரை தெருவைச் சேர்ந்த தங்கராசு மகனின் நெப்போலியன் (34) சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

புகாரில் "கடந்த 2017 ஆம் ஆண்டு மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெயரில் நித்திலா எனக்கு அறிமுகமானார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் வசித்து வந்த போது மீனா சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டுச் சென்றுவிட்டார்.

அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் மீரா, சீர்காழியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். தன்னை ஏமாற்றிய மீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

புகாரின் அடிப்படையில் போலீஸார், சரஸ்வதி என்ற நித்திலாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன. அவர் கொடியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழையாறு கிராமத்தை சேர்ந்த சுடலைக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முறைப்படி கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகனும் , மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டால், பெண் குழந்தையை தனது கணவரின் அண்ணனின் பராமரிப்பில் விட்டுவிட்டு ஆண் குழந்தையுடன் கொடியம்பாளையத்தில் தனது அம்மா வீட்டில் சரஸ்வதி வசித்து வந்துள்ளார்.

பின்னர் தனது பெயரை மீனா என மாற்றிக் கொண்டு 2017ஆம் ஆண்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த நெப்போலியனை திருமணம் செய்து கொண்டு அவருடன் 4 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு 2021 இல் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த நடராஜனின் மகன் ராஜாவிடம்தான் டாக்டர் என கூறி அவருடனும் குடும்பம் நடத்திவிட்டு அங்கிருந்தும் தலைமறைவாகிவிட்டார்.

அது போல் ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை சரஸ்வதி ஏமாற்றியது தெரியவந்தது. அந்த வகையில் நித்திலா என்ற பெயரில் இந்த பெண் ஏமாற்றியதாக சிவசந்திரனும் புகார் அளித்துள்ளார். இவர் பல ஆண்களை பல பெயர்களில் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சரஸ்வதி, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+