திடீரென பேச மறுத்ததால் ஆத்திரம்... 5 ஆண்டு காதலி முகத்தில் ஆசிட் வீசிய காதலன் கைது!
சீர்காழி: சீர்காழி அருகே பேச மறுத்த காதலி முகத்தில் ஆசிட் வீசிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே தாடாளன் காமராஜபுரம் தெற்கு தெருவில் வசிக்கும் கொத்தனார் வீரமணி என்பவரது மகள் சுபா (20). பிளஸ்-2 படித்துள்ள சுபா சீர்காழியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவரும், சீர்காழியை அடுத்து பனமங்கலம் வடக்கு தெருவில் வசிக்கும் பெருமாள் மகன் தங்கபாண்டியனும் (27) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தங்கபாண்டியன் சென்னையில் உள்ள டிராவல்ஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். காதலர்கள் இருவரும் செல்போன் வாயிலாக தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீப காலமாக தங்கபாண்டியனுடன் செல்போனில் பேசுவதை சுபா தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தங்கபாண்டியன் நண்பர்கள் மூலம் நடத்திய விசாரணையில், சுபாவை அவரது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தங்கபாண்டியன் தனது உறவினர்களுடன் கடந்த 15-ந்தேதி சுபா வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். ஆனால், அதற்கு சுபாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தங்கபாண்டியன் தனக்கு கிடைக்காத சுபா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு ஆசிட்டுடன் சுபாவின் வீட்டிற்கு சென்று பின்புறத்தில் மறைந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுபாவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பி ஓடினார் தங்கபாண்டியன்.
வலியால் துடித்த சுபாவை குடும்பத்தார் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சீர்காழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications