பீப் பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயன்? சிம்பு மறுப்பு
பீப் பாடல் சர்ச்சையில் சிவ கார்த்திகேயனை இழுக்காதீர் என சிம்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்புகளும், மகளிர் சங்கங்களும் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கோவை போலீசார் இருவருக்கும் 2 வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் சென்னை போலீசாரும் இந்த வழக்கில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தான் இந்தப் பாடலை இணையத்தில் வெளியிடவில்லை என்று சிம்பு கூறியுள்ள நிலையில் இந்தப் பாடலை இணையத்தில் வெளியிட்டது யார்? என்று யூடியூப் நிறுவனத்திடம் சைபர்கிரைம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர்.
இந்த கடிதத்திற்கு பதில் வந்தால்தான் இணையத்தில் லீக் செய்தது யார்? என்பது தெரியவரும். இந்நிலையில் பீப் சாங்கை சிவகார்த்திகேயன் தான் லீக் செய்ததாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக வதந்தி ஒன்று பரவி வருகிறது. இதையடுத்து சிம்புவின் அட்மின் கையாளும் டுவிட்டரில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், பீப் பாடல் லீக் விவகாரத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒருசிலர் தேவையில்லாமல் அவரது பெயரை இந்த விஷயத்தில் வேண்டுமென்றே இழுப்பதாகவும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் பீப்' பாடல் விவகாரத்தை சட்டபூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். அவர் என்னை பார்த்துக்கொள்வார் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
Admin: @Siva_Kartikeyan has nothing 2 do with d #BeepSong leak. Some of dem r purposely pulling his name. Do not believe in rumours. #Karma
— STR (@iam_str) December 22, 2015 -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications