சிவகங்கையில் ஐந்து வயதுக் குழந்தை தொட்டியில் விழுந்து மரணம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: ஐந்து வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் புதுவயலைச் சேர்ந்தவர் ஜான் பாட்ஷா. இவருக்கு 5 வயதில் அர்ச்சனா என்ற மகள் இருந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது.

 In Sivaganga five years old child died

திடீரென குழந்தையைக் காணாததால், பெற்றோர் பதறி அக்கம் பக்கமெல்லாம் தேடியுள்ளனர். பிறகு, தண்ணீர் தொட்டியில் பார்த்த போது குழந்தை உயிரிழந்தநிலையில் இருந்துள்ளது.

குழந்தை அர்ச்சனா தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டது. மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A five year old child died when she mistakenly fell into the water tank and police inquiring about this death.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற