சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: அறைகள் தரைமட்டம்
விருதுநகர்: சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பட்டாசு தயாரிக்கும் அறை இடிந்து தரைமட்டமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு எந்த வித காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
சிவகாசி காமாக் ரோட்டை சேர்ந்தவர் உமாகாந்த், 45. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே ஜமீன்சல்வார் பட்டியில் உள்ளது. இங்கு 64 அறைகள் உள்ளன. வழக்கம் போல் நேற்று இந்த பட்டாசு ஆலையில் சுமார் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மதிய உணவு இடைவேளையின் போது, தொழிலாளர்கள் பட்டாசுகள் தயாரிக்கும் அறையை விட்டு சில மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த ஆலையின் அறை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரை மட்டமானது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை ஆய்வு தனி தாசில்தார் முத்துலட்சுமி, சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளையன், இன்ஸ்பெக்டர் சீனிவாசகன், சப்இன்ஸ்பெக்டர் ராமராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெடி விபத்து நடந்த அறையில் சரவெடிகளுக்கு மருந்து செலுத்தும் பணி நடந்து வந்துள்ளது. உணவு இடைவேளை என்பதால் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றதால் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. உணவு இடைவேளையின் போது வெடிவிபத்து நடந்ததால் உயிரிழப்பு இல்லாமல் போனது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. அடிக்கடி இங்கு வெடிவிபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதலிப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 50 பேர் பலியானார்கள், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளினால் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் நிகழ்ந்தாலும் உயிர்சேதம் தவிர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications