மேட்டூர்: 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை- நரபலி நாடகமாடிய சிறுவன் கைது
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று வீட்டிற்குள் இருந்த அலுமினிய பாத்திரத்திற்குள் அடைத்து வைத்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியை கொன்று விட்டு நரபலி செய்யப்பட்டது போல நாடகமாடியுள்ளான் அந்த கொலையாளி.
சேலம் மாவட்டம் கொளத்தூர் தெலுங்கனூரை சேர்ந்தவர் மீனவ தொழிலாளி ராஜா,30. இவரது மனைவி மோகனவள்ளி. இவர்களுக்கு ஜோதிகா,8, தர்ஷினி,6 என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அங்குள்ள அரசு பள்ளியில் ஜோதிகா 3ம் வகுப்பு படித்து வருகிறார். தர்ஷினி 2ம் வகுப்பும் படித்து வந்தார்.
சனிக்கிழமையன்று மாலையில் வெளியில் சென்ற ராஜா தனது இளைய மகள் தர்ஷனியை உடன் அழைத்துச் சென்று கடையில் மிட்டாய் வாங்கி கொடுத்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவர் இரவு வீடு திரும்பிய போது வீட்டில் தர்ஷினி இல்லாதது குறித்து கேட்டார். அப்போது, நீங்கள் தானே அவளை அழைத்துச்சென்றீர்கள். என அவரது மனைவி தெரிவித்துள்ளார். உடனே ராஜா கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.

புகாரின் போரில் நேற்று காலை 11 மணிக்கு மேட்டூர் டிஎஸ்பி நடராஜன் மற்றும் கொளத்தூர் போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது, போலீசாரை கண்டதும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் சிறுவன் திடீரென ஓடினான். போலீசார் அவனை மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினான்.
இதையடுத்து அவனது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பூஜை அறையின் தரையில் ரத்தம் திட்டு, திட்டாக காணப்பட்டது. அறையின் ஓரத்தில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை எடுத்து பார்த்தபோது ஒரு அலுமினிய அண்டாவில் சிறுமி தர்ஷினியின் உடல் சுருட்டி திணித்து வைத்திருந்ததை கண்டனர்.
சிறுமியின் நெஞ்சு முதல் வயிறு வரையிலும், கன்னத்திலும் பிளேடு கொண்டு கீறிய ஆழமான காயம் காணப்பட்டது. அறையில் நரபலி கொடுத்ததற்கான அடையாளம் காணப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், மிட்டாய் வாங்கி கொடுத்து ராஜா தனது மகள் தர்ஷினியை அனுப்பி வைத்ததை கவனித்த சிறுவன், அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சத்தம் போட்டுவிட கூடாது என்பதற்காக, சிறுமியின் வாயில் துணி வைத்துள்ளான். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்து விட்டாள். இதையடுத்து பிளேடு கொண்டு உடம்பில் காயங்கள் ஏற்படுத்தி நரபலி கொடுத்தது போல் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளான்.
சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். சடலத்தை மறைத்து வைப்பதற்கு அவனது தாத்தா ராமன் உடந்தையாக இருந்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அவனது தாத்தா ராமன்,60 என்பவரை பிடித்து கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
கள் கொலை செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை, எனது மகளை காணாததால், எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுடன் தேடினேன். அப்போது, அந்த சிறுவனும் எங்களுடன் வந்து குழந்தையை தேடினான். 6 மாதத்திற்கு முன்பு நடந்த பிரச்னை தொடர்பாக ஊரை விட்டு சென்றவன், நேற்று தான் ஊருக்குள் வந்தான். இதனால் அவன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தேன்.
பின்னர் போலீசாருடன் அந்த சிறுவன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அண்டாவிற்குள் எனது மகள் சடலமாகக் கிடந்தாள். ரத்தக்கறை தெரியாமல் இருக்க, அங்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவியுள்ளான். தப்ப முயன்ற அவனை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
சிறு குழந்தை என்று கூட பார்க்காமல், கொடூரமாக கொலை செய்துள்ளான். எனது அன்பு மகளை பறிகொடுத்துவிட்டேன். அவனை தூக்குல போடுங்க சார்... இனிமேல் எந்த குழந்தைக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்று கண்ணீர் மல்க கூறினார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுவன், கடந்த ஆண்டு சிறுவர்களிடம் தகாத முறையில் நடந்ததால் ஊர் பஞ்சாயத்து கூடி த ஊருக்குள் வசிக்க தடை விதித்தனர். அவனது தாத்தா மன்னிப்பு கேட்டதற்கு பின், கடந்த 1ம் தேதி தான் ஊருக்குள் வந்தனர். ஊருக்குள் வந்த அடுத்த நாளே 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது கிராம மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.
சிறுமியின் உடலை வைத்துக்கொண்டு பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நிவாரணம் பெற்றுத்தருவதாக போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து சடலத்தை பெற்றுச் சென்று சொந்த ஊரில் தகனம் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications