வேலூரில் மண்ணெண்ணெய் கொண்டு வந்து பள்ளியில் தீக்குளித்த மாணவி மரணம்
வேலூர்: வேலூர் அருகே 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் புத்தக பையில் மண்ணெண்ணெய் எடுத்து வந்து பள்ளி கழிவறையில் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இன்று காலை பள்ளி துவங்கிய சிறிது நேரத்தில் பள்ளியில் உள்ள கழிவறையில் மாணவி ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதை கேட்ட தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது கழிவறைக்குள்ளே மாணவி தீக்குளித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை காப்பாற்ற முயன்றபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. உடனே இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டிஎஸ்பி விஜயகுமார், ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் தீக்குளித்து இறந்த மாணவி, பேரணாம்பட்டு டவுன் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் மகள் ஹரிணி(11) என்பது தெரியவந்தது. இவர் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தாயாரை இழந்த இவர், தகப்பனார் கண்ணன், சித்தி ஆகியோரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு வரும்போதே புத்தக பையில் மண்ணெண்ணெய் கேன் எடுத்து வந்து உடலில் ஊற்றி கொண்டு தீவைத்து இறந்துள்ளார்.
இவர் எதற்காக தீக்குளித்து இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications