கடலூரில் அமைச்சர் எம்.சி. சம்பத் மீது செருப்பு வீச்சு- பொதுமக்கள் ஆத்திரம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.சி. சம்பத் பிரசாரம் செய்த போது செருப்பு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் போட்டியிடுகிறார். அவர் தம்முடைய பிரசாரத்தின் போது கடலூரில் புதிய பேருந்து நிலையம்; புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; கடலூர் துறைமுகத்தை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

Slipper thrown at Minister Sampath's campaign

இந்த நிலையில் கடலூர் பகுதியில் இன்று திறந்த ஜீப்பில் அமைச்சர் சம்பத் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது 2 இளைஞர்கள் செருப்பை கழற்றி சம்பத்தை நோக்கி வீசினர்.

அந்த செருப்பு சம்பத்தின் வாகனத்தின் முன்பகுதியில் வந்து விழுந்தது. இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. 5 ஆண்டுகாலமாக தொகுதி பக்கமே வராமல் ஓட்டுக் கேட்க மட்டும் வந்துவிட்டீங்களோ? எனவும் அப்போது சிலர் ஆவேசமாக சம்பத்தை நோக்கி கேள்வி கேட்டனர்.

ஆனால் அமைச்சர் சம்பத்தோ செருப்பு வீசியதையோ பொதுமக்கள் கேள்வி கேட்பதையோ கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பிரசாரம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+