ஸ்மால் பஸ்களில் இருப்பது இரட்டை இலை இல்லை, அது ஒரு 'நேச்சுரல் சீனரி'...செ.கு. தமிழரசன்

முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்த ஸ்மால் பஸ்கள் சென்னை நகரில் ஓடுகின்றன. இந்த பஸ்களில் இரட்டை இலை வரையப்பட்டுள்ளது. இது குறித்து கேட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கடந்த 25ம் தேதி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ. ஸ்மால் பஸ்கள் பற்றி பேசினார். அப்போது அவர், ஸ்மால் பஸ்களில் இருப்பது இரட்டை இலை இல்லை அது இயற்கை காட்சி என்று தெரிவித்தார்.
இதை கேட்ட எ.வ. வேலு உள்ளிட்ட திமுகவினர் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அதிமுகவில் இருந்து சென்ற எ.வ.வேலுவுக்கு இது பற்றி பேச உரிமை இல்லை என்று முனுசாமி தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷமிட்டனர். உடனே அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயரர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து திமுகவினர் வெளியேற்றப்பட்டார்கள்.
முன்னதாக எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சீரமைத்து அங்கு இரட்டை இலை சின்னம் வைக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு அது குதிரையின் இறக்கை என்று கூறப்பட்டது. மேலும் அம்மா குடிநீர் பாட்டில்களிலும் இரட்டை இலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications