ரேஷனில் பொருட்கள் பெற மார்ச் 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு கட்டாயம்.. அமைச்சர் காமராஜ்!
ரேஷனில் பொருட்கள் பெற மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரேஷனில் பொருட்கள் பெற மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளான தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கி வருகிறது.

இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் காமராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ரேஷனில் பொருட்கள் பெற மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என அவர் கூறியுள்ளார். பெரும்பாலானோருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications