பெருமாள் சிலை தலை மீது படம் எடுத்து நின்று ஆடிய பாம்பு.. மதுரையில் பரபரப்பு!
பெருமாள் கோயிலில் பூஜையில் நடுவே பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

மதுரை: திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் பூஜையில் நடுவே வந்த பாம்பு பெருமாள் சிலை மீது ஏறி நின்று காட்சியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்குவடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது. இங்கு பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர் என்றும் வைகுண்டத்துக்கு வழிகாட்டி சென்றவர் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மந்திர எழுத்துக்களோடு காணப்படும் சக்கரத்தாழ்வார் இங்கு மட்டுமே உள்ளார் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த கோயிலானது, 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது கூடுதல் சிறப்பு ஆகும்.
இந்நிலையில் இந்த கோயில் பிரகாரத்திற்குள் பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று ஒரு நாகப்பாம்பு பெருமாள் சிலை மீது ஏறிக்கொண்டது.
இதனால் அங்கிருந்த பக்தர்கள், பூசாரிகள், மேலும் கோயிலுக்கு வந்தவர்கள் அனைவருமே பாம்பை வியப்புடன் பார்த்தனர். மேலும் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து கொண்டனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications