வழக்கு விசாரணையின்போது மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி.. ஹைகோர்ட்டில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கு விசாரணையின்போது ஹைகோர்ட்டில் சமூக நல ஆர்வலர் டிராபிக் ராமசாமி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மெரீனா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த டிராபிக் ராமசாமி கோரிக்கைவிடுத்திருந்தார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

Social activist Traffic Ramasamy fainted in the High Court

மெரினா கடற்கரை, பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக அரசு பதில் கூறியது. விசாரணை நடந்துகொண்டிருந்தபோது டிராபிக் ராமசாமி திடீரென மயங்கி சாய்ந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Traffic Ramasamy Beaten by Devotees in Melmaruvathur- Oneindia Tamil

கடந்த மாதம், திருப்பூர் அரசு அலுவலகங்களுக்கு அருகிலும் எதிரிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் திடீர் போராட்டம் நடத்தினார் டிராபிக் ராமசாமி. அப்போது அவர் அரசுக்கு எதிராகவும், பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறூ செய்யும் அரசியல் பிரமுகர்கள் குறித்தும் கோஷங்களை எழுப்பினார்; கண்டனம் தெரிவித்தும் பேசினார். பேச்சின் நடுவே மயங்கி விழுந்தார் டிராபிக் ராமசாமி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Social activist Traffic Ramasamy fainted in the High Court when attend court proceeding.
Please Wait while comments are loading...