For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழைகளுக்கான தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு லஞ்சம்.... வீடியோவில் பிடிபட்ட சமூக நலத் துறை அலுவலர்

ஏழைகளுக்கான தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு சமூக நலத் துறை அலுவலர் லஞ்சம் பெறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தருமபுரி: ஏழைகளுக்கான தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு சமூக நலத் துறை அலுவலர் லஞ்சம் பெற்றது தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

தங்கத்தின் விலை ரூ.20 ஆயிரத்தை தொட்ட போது தாலிக்குத் தங்கம் வாங்க இயலாத காரணத்தால் ஏழை பெண்களின் திருமணம் நின்றுவிடக் கூடாது என்பதற்காக ஜெயலலிதாவால் தாலிக்குத் தங்கம் திட்டம் தொடங்கப்பட்டது.

Social welfare officer in Dharmapuri gets bribe

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கத்தை இலவசமாக வழங்குகிறது இந்த திட்டம். இந்நிலையில் தருமபுரியில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் நடைபெறுகிறது.

இந்த திட்டத்தில் தங்கம் பெறவுள்ள பயனாளியிடம் தருமபுரி நல்லம்பள்ளியில் உள்ள சமூக நல துறை அலுவலர் மாதம்மாள் லஞ்சம் பெறும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

English summary
Social welfare officer in Dharmapuri was caught in camera when she gets bribe for gold for thali scheme which was started by Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X