தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்குமாம்.. கனமழைக்கும் வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் ஜில் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் ஓரளவுக்கு தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்தது.

மேற்கு திசை காற்றில் மாற்றம்
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட திசை மாற்றம் மற்றும் வேகமாறுபாட்டின் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது.

மழை நீடிக்கும்
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழை
ஒரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சமயபுரத்தில் 17 செ.மீ
ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 17 செ.மீ., காஞ்சிபுரத்தில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

6சதவீதம் அதிகம்
ஜூன் மாதத்தை பொறுத்த வரை, கடந்த ஆண்டை விட தென் மேற்கு பருவமழை 6 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!










Click it and Unblock the Notifications