அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு - சென்னை பொதுக்கூட்டத்தில் சோனியா பேச்சு
சென்னை: அதிமுகவுக்கும் பாஜக அரசுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
சென்னை தீவுத்திடலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: சகோதர சகோதரிகளே வணக்கம்.. சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது அதிமுக அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

வரலாற்றில் இல்லாத பேரழிவை சந்தித்திருக்கிறீர்கள். இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான பேர் இறந்தார்கள். மக்களே ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். வெள்ளத்தை எதிர்த்து போராடிய உங்கள் மன உணர்வை நான் பாராட்டுகிறேன். மக்களே மக்களுக்காக உதவுகிற நிலைக்கு தள்ளிவிட்டது அதிமுக அரசு.
வெள்ளத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டபோது அதிமுக அரசு எங்கே போனது? அதிமுக அரசு கண்ணீரை துடைத்ததா? உதவிக் கரம் நீட்டியதா? வெள்ளம் வந்து 4 மாதங்களான நிலையில் தொழில் நிறுவனங்களுக்கான காப்பீடு இன்னும் கிடைக்கவில்லை. வறட்சி தாண்டவமாடும் நிலையில் மோடி அரசும் அதிமுக அரசும் என்ன செய்திருக்கிறார்கள்?
தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு வளர்ச்சியும் முன்னேற்றமும் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. விவசாய பெருங்குடி மக்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நெசவாளர்களும் பெரும் துயரத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
2013 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது அதிமுக அரசு. நிலம் கையகப்படுத்த விவசாயிகள் ஒப்புதல் தேவை என்பதை மாற்றியது அதிமுக அரசு.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் உருவாகின. அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு தொழிற்சாலையாக தமிழகத்தை விட்டு வெளியேறுகின்றன. தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவதால் வேலை இல்லா திண்டாட்டாம் ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தராமல் அன்னிய நாட்டு மீனவர்களை மோடி அரசு பாதுகாக்கிறது
சமூக நலத்திட்டங்களுக்கான நிதி உதவியை மோடி அரசு குறைத்துவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி குறைக்கப்பட்டதால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது. மோடி அரசின் நடவடிக்கையை கேள்வி கேட்காமல் நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரிக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம். வெற்று கோஷங்கள், பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் தரவில்லை. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
தமிழகத்தில் செயல்படும் அரசாங்கத்தை தருவோம் என உறுதி அளிக்கிறோம். விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் உரிமைக்கான அரசாங்கத்தை நாங்கள் தருவோம். அதிமுகவுக்கும் பாஜக அரசுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது. இவ்வாறு சோனியா பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications