பாசிச பாஜகவிற்கு எதிராக நான் கோஷமிட போகிறேன்.. டிவிட்டரில் சொல்லிவிட்டு செய்த சோபியா!
மாணவி சோபியா பாஜக ஒழிக என்று கோஷம் இடுவதற்கு முன் அதை ஏற்கனவே தனது டிவிட்டர் கணக்கு மூலம் சொல்லிவிட்டுத்தான் செய்துள்ளார்.
சென்னை: மாணவி சோபியா பாஜக ஒழிக என்று கோஷம் இடுவதற்கு முன் அதை ஏற்கனவே தனது டிவிட்டர் கணக்கு மூலம் சொல்லிவிட்டுத்தான் செய்துள்ளார். இந்த டிவிட் வைரல் ஆகியுள்ளது.
சோபியா தற்போது இந்தியா முழுக்க வைரல் ஆக்கியள்ளார். நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' பெரிய வைரல் ஆகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில் பயணித்த பிஎச்டி மாணவி சோபியா, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார். இதனால் தமிழிசைக்கும் சோபியாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

கைது செய்யப்பட்டார்
இதையடுத்து நேற்று மாலையே சோபியாவை போலீஸார் கைது செய்தனர். நேற்று இரவே அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தற்போது அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் பெயில் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய அளவில் வைரல்
இதனால் சமூக வலைதளங்களில் சோபியா பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளார். இணையம் முழுக்க எல்லோரும் #பாசிசபாஜகஒழிக என்று ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள். தமிழர்கள் மட்டுமில்லாமல், இதன் பொருளை கேட்டு வேறு மாநில மக்களும் பாஜகவிற்கு எதிராக பேசி வருகிறார்கள்.

ஆதரவு குவிகிறது
அதுமட்டுமில்லாமல் சோபியாவிற்கு தொடர்ந்து ஆதரவும் குவிந்து வருகிறது. ஸ்டாலின், சீமான் தொடங்கி அதிமுக, பாஜக அல்லாத கட்சியினர் பலர் தொடர்ந்து சோபியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் தமிழிசையின் செயலுக்கு எதிராகவும் பேசி வருகிறார்கள்.
|
ஏற்கனவே யோசித்தார்
இதை சோபியா ஏற்கனவே சொல்லிவிட்டுத்தான் செய்து இருக்கிறார். ஆம், பாஜகவிற்கு எதிராக கூச்சல் இடுவதற்கு முன் அதுகுறித்து டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். அதில் ''நான் தமிழிசை சௌந்தரராஜனுடன் விமானத்தில் இருக்கிறேன், எனக்கு "மோடி-பாஜக-ஆர்எஸ்எஸ் இன் பாசிச ஆட்சி ஒழிக". என்று கத்த வேண்டும் போல் உள்ளது. என்னை விமானத்தில் இருந்து வெளியே அனுப்புவார்களா?'' என்று கேள்வி கேட்டுவிட்டு பின் நிதானமாக குத்தியுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications