வங்கக்கடலில் சூறாவளி சுழற்சி: தென் தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கு வாய்ப்புள்ளதாக ஸ்கைமெட் வெதர் தெரிவித்துள்ளது.
சென்னை: தென் தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கு வாய்ப்புள்ளதாக ஸ்கைமெட் வெதர் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டமும் குளிரும் நிலவி வந்தது.
தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் பகல் நேரங்களில் வெளியே தலையை காட்ட முடியாத அளவில் வெயில் கொளுத்தி வருகிறது.

மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் மழையை எதிர்பார்க்கலாம் என ஸ்கைமெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் மாநிலத்தின் வடபகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

32 டிகிரி வரை வெப்பம்
தமிழகத்தில் தற்போது அதிகபட்சமாக 30 முதல் 32 டிகிரி வரை வெப்பம் நிலவி வருவதாகவும் குறைந்தபட்சமாக 19 முதல் 20 டிகிரி வரை வெப்பம் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 டிகிரி வரை வெப்பம்
அதேநேரத்தில் கேரளாவில் அதிகளவாக 32 முதல் 34 டிகிரி வரை வெப்ப நிலையும் குறைந்தபட்சமாக 22 முதல் 24 டிகிரி வரையும் வெப்பம் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் தீவுகளில் மழை
தெற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டு காற்று வீசி வருவதாகவும் இதன் காரணமாக வங்கக்கடலில் உள்ள தீவுகளில் கடந்த 48 மணிநேரமாக மழை பெய்து வருகிறது. தற்போது இந்த சூறாவளி கிழக்குப்பகுதியில் நகர்கிறது.

தமிழகம் கேரளா
இதன் காரணமாக இலங்கையில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு பகுதியிலும் நல்ல மழையை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் முதல்
இந்த சூறாவளி நாளை தெற்கு கடலோர பகுதிகளை நெருங்கும் என்றும் தென் கடலோர மாவட்டங்களில் 25ஆம் தேதி முதல் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை மார்ச் ஒன்றாம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 25ம் தேதி வானிலை நிலவரத்தை அறிய https://tamil.oneindia.com/tamil-nadu-weather-in-tn/ இணையதளத்தைப் பாருங்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications