தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.
சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோல் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை முறையாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் தற்போது தொடங்கியிருக்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு நிலை
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே நீடிப்பதாக அவர் கூறினார்.

வட தமிழகத்தில் மிதமான மழை
இதன் காரணமாக நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு இயக்குநர் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார். வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை புறநகர் பகுதியில் இடைவெளி விட்டு ஒரு சில முறை மழை பெய்யும் என்றும் அவர் கூறினார். கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இயல்பைவிட குறைவு
வடகிழக்கு பருவமழையானது, கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 27 சென்டி மீட்டர் பதிவாகியுள்ளது.இது இயல்பை விட இயல்பை விட 21 சதவீதம் குறைவு என்றும் அவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பில் தலா 4 சென்டிமீட்டரும் நாகப்பட்டினம், காரைக்கால், வேதாரண்யத்தில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications