தென் மாவட்டங்களை குறிவைக்கும் மழை... 4 நாட்களுக்கு பெய்யுமாம்!!
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்ததில் தமிழகத்தின் வடமாவட்டங்களும், தென் மாவட்டங்களும் கதி கலங்கிப் போயுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 18 நாட்கள் உள்ளன. இந்நிலையில், வடமாவட்டங்களில் மழை குறைந்து, தென்மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டிவரும் கனமழையால் அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாலத்தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் பகுதியி்ல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 14ம் தேதி முதல் வரும் 17ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications