தென் மேற்கு பருவமழை தொடங்கியது.. வானிலை மையம் தகவல்
தெற்கு அந்தமான் - நிகோபர் தீவுகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தெற்கு அந்தமான் - நிகோபர் தீவுகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை வழக்கமாக இந்தியாவில் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் தென் மேற்கு பருவ மழை நீடிக்கும்.
ஜூன் 1ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில் இந்த ஆண்டு சற்று முன்னதாக அந்தமான் நிகோபர் தீவுகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

பருமழை தொடங்கியது
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அப்போது தெற்கு அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

48 மணி நேரத்தில்
அடுத்த 2 நாட்களில் தென் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும். 48 மணி நேரத்தில் குமரிக்கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது.

வட தமிழகத்தில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

பலத்த காற்றுடன் மழை
தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினார். அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

மீனவர்கள் செல்ல வேண்டாம்
கன்னியாகுமரி, லட்சத்தீவு, கேரளா கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மே 30 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருவையாறில் 8 சென்டி மீட்டர் மழையும் சிவகங்கையில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications