தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் கூடுதல் மழைக்கு வாய்ப்பாம்!
சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன் கூட்டியே கடந்த மே 30-ஆம் தேதி தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழைக்கான அறிகுறி காணப்பட்டது. மழையும் பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது. இந்த நிலையில் சென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும் அரபிக் கடலின் மத்திய பகுதி, கர்நாடகா, கோவா வரை மழை மேகங்கள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் சென்னைக்கு வடக்கே நெல்லூர் வரை மேகங்கள் பரவி உள்ளது.
இந்திய அளவில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை 18 சதவீதம் மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 16.4 சதவீதம் மழை பெய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து தெற்கு இந்திய பெருங்கடலில் உருவான உயர்ந்த காற்றழுத்த மண்டலம் வலு பெற்று உள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையும், இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும். சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இதற்கிடையே மேற்கு மத்திய வங்க கடலில் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருக்கிறது.
இதனால் மழையை எதிர்பார்க்கலாம் என்றே தெரிகிறது. மேலும் கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் குஷியாகி உள்ளனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications