சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை: சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொச்சுவேலி-சென்னை சென்ட்ரல் (06360): கொச்சுவேலியிலிருந்து, டிசம்பர் 15, 22, 29, ஜனவரி 5,12,19 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைதோறும்) இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலி (06359): சென்னை சென்ட்ரலில் இருந்து, டிசம்பர் 16, 30, ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைதோறும்) இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு, மறு நாள் பிற்பகல் 2.40 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும்.
அதிவிரைவு சிறப்பு ரயில்கள் கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுண், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்ப்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கொச்சுவேலி-சென்னை சென்ட்ரல் (06356): கொச்சுவேலியிலிருந்து, ஜனவரி 1,8, 15 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைதோறும்) இரவு 8 மணிக்குப் புறப்பட்டு, மறு நாள் பிற்பகல் 1.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
கொச்சுவேலி-சென்னை சென்ட்ரல் (06354): கொச்சுவேலியிலிருந்து, ஜனவரி 4, 6, 11, 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள் கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுண், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்ப்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலி (06355): சென்னை சென்ட்ரலிருந்து, ஜனவரி 2,5,9,12,16,19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டு, மறு நாள் காலை 6.30 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும்.
சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலி (06357): சென்னை சென்ட்ரலிருந்து, ஜனவரி 7, 14 ஆகியத் தேதிகளில் (புதன்கிழமைதோறும்) மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.35 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும்.
இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஆலுவா, எர்ணாகுளம் டவுண், கோட்டயம், திருவல்லா, செங்கன்னூர், காயன்குளம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருவனந்தபுரம் - சென்னை
திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் (06348): திருவனந்தபுரத்திலிருந்து, ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைதோறும்) இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் (06347): சென்னை சென்ட்ரலிருந்து, ஜனவரி 8, 15 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைதோறும்) மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுண், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்ப்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில்- மங்களூரு சந்திப்பு (06306): நாகர்கோவிலில் இருந்து, ஜனவரி 4, 11 ஆகிய தேதிகளில்(ஞாயிற்றுக்கிழமைதோறும்) இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.
மங்களூரு சந்திப்பு-நாகர்கோவில் (06305): மங்களூரிலிருந்து, ஜனவரி 5, 12 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்தச் சிறப்பு ரயில்கள் இரணியல், குழித்துறை, திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுண், ஆலுவா, திருச்சூர், சோரணூர் சந்திப்பு, திரூர், கோழிக்கோடு, வடக்கரா, தாளச்சேரி, கண்ணூர், பய்யனூர், கஞ்சன்காடு, காசர்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட அனைத்து ரயில்களுக்கான முன்பதிவு இன்றுமுதல் (டிசம்பர் 6) தேதி தொடங்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தான ரயில்கள்...
நாகர்கோவில்-மங்களூரு சந்திப்பு (06306), மங்களூரு சந்திப்பு-நாகர்கோவில் (06305) இடையே டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் இயங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த மேற்கண்ட எண்களிலுள்ள இரண்டு சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications