இடார்சி ரயில் நிலைய தீவிபத்து- மேலும் 16 வடமாநில ரயில்களை ரத்து செய்த தெற்கு ரயில்வே
சென்னை: இடார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மேலும் 16 ரயில்கள் தெற்கு ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்கு மத்திய ரயில்வேயிற்கு உட்பட்ட இடார்சி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளது. இதையொட்டி மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை- டெல்லி "சம்பர்க் கிராந்தி" எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் வழியாக செல்லவேண்டிய பெங்களூரு-பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- டெல்லி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வருகிற 14 ஆம் தேதி செல்லவேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
15 ஆம் தேதி செல்லவேண்டிய சென்னை சென்ட்ரல்- டெல்லி கிராண்ட் டிரங்க், டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரவேண்டிய கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், டெல்லி-கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில், மதுரை-டேராடூன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்-ஜம்முதாவி அந்தமான் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி- டெல்லி வாராந்திர ரயில், சென்னை சென்ட்ரல் வழியாக செல்லவேண்டிய பாட்னா-பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
16 ஆம் தேதி புறப்படவேண்டிய பாட்னா-பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்- டெல்லி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-ஜம்முதாவி அந்தமான் எக்ஸ்பிரஸ், பகத்கி கோதி ராஜஸ்தான் - மன்னார்குடி வாராந்திர ரயில், டெல்லி-மதுரை சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், பாட்னா-பெங்களூரு கன்டோண்மென்ட் பிரிமீயம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications