கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று 4 சிறப்பு ரயில்கள்
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நான்கு சிறப்பு ரயில்களை இன்று இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கனமழையின் காரணமாக கடந்த சில தினங்களாக பல்வேறு ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரத்திலிருந்து டெல்லிக்கு, சென்னை எழும்பூர் வழியாக இன்று காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. விழுப்புரத்தில் இருந்து ஹவுராவுக்கு சென்னை எழும்பூர் வழியாக இன்று இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரிசாவின் பூரி நகருக்கு இன்று இரவு 8 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசியில் உள்ள மண்டுயடிக்கு இன்று இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, தஞ்சை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது என கூறியுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும் சந்தர்காசி ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் அகமதாபாத் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications