மழையால் ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெறும் கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: மழை வெள்ளத்தால் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெறும் கால அவகாசத்தை 10 நாட்களாக நீட்டித்துள்ளது தெற்கு ரயில்வே.
மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தால் இதுவரை 561 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மழையால் மின்சார ரயில் சேவையும் பாதிப்பு அடைந்தது.

ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் ரத்தான ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிப்பதாகவும் அதை 3 நாட்களில் பெற்றுக் கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே அறிவித்தது.
ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும், நேரில் பதிவு செய்தவர்கள் ரயில் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பயணிகள் பணத்தை திரும்பப் பெறும் கால அவகாசத்தை 3ல் இருந்து 10 நாட்களாக அதிகரித்து அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி கூறுகையில்
ரயில் ரத்து செய்யப்பட்ட நாளில் இருந்து 10 நாட்கள் வரை டிக்கெட் கட்டணத்தை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications