வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வட கிழக்கு பருவமழை முடிவடைய 4 நாட்களே உள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால், தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வட கிழக்கு பருவமழை வழக்கமாக டிசம்பர் 31ம் தேதி முடிவடையும். வடகிழக்கு பருவமழை முடிவடைவது குறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்த பிறகுதான் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

இந்நிலையில் தற்போது, தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டு உள்ளது. அது வலுவற்ற நிலையில் உள்ளது. குளிர் அதிகமாக இருப்பதால் தென் கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் 30ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை தான் நிலவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை இந்த வருடம் தாமதமாக தொடங்கியது. மேலும், வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. வார்தா புயல் சென்னையை கடந்து சென்றதால் ஓரளவுக்கு சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications