கன மழையால் நனைந்து குளிர்ந்த தென் மாவட்டங்கள்... வைகையில் வெள்ளம்
மதுரை: கன மழை காரணமாக தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் இடியுடன் கூடி கன மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மக்களை மகிழ்விக்கும் வகையில் கன மழை பெய்து வருகிறது. சென்னை முதல் குமரி வரை மழை விடாமல் வெளுத்துக் கட்டி வருகிறது.

தென் மாவட்டங்களிலும் பல பகுதி்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரையில் கடந்த பல நாட்களாக பெரிய மழை இல்லாத நிலையில் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால் வைகை அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டபடி ஆற்றில் நீர் ஓடியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்க்க படையெடுத்தனர். தொடர்ந்து மழை பெய்தால் குடிநீர்ப் பிரச்சினை வராது என்றும் மக்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் நகரிலும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. கன மழை காரணமாக திண்டுக்கல் நகரின் பல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
மாவட்டத்தில், கொடைக்கானலில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கையிலும் நல்ல மழை பெய்துள்ளது. நகரில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. காரைக்குடியில் பெய்த மழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
தேனி
தேனி மாவட்டத்திலும் பல பகுதி்களில் கன மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் 136 அடியைத் தொட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications