For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்மேற்கு பருவமழை துவங்கியது: தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இன்று முதல் தொடக்கம்

    சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது.

    தமிழகத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை சீசன் நேற்றே துவங்கிவிட்டது.

    Southwest monsoon begins in Tamil Nadu

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது,

    தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று துவங்கியது. இந்த ஆண்டு நாடு முழுவதும் இயல்பை ஒட்டி மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றத்தழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலாமாக மாறி மியான்மரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

    தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் தென் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றார்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    English summary
    Southwest monsoon has begun in Tamil Nadu on may 29th. South and some parts in northern parts of the state will receive rain today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X