Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்.. ஜஸ்ட் மிஸ்ஸான செளமியா அன்புமணியின் வெற்றி! இதையும் கவனிக்கனும்!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தருமபுரியில் தோற்றாலும் அங்குள்ள 4 தொகுதிகளில் திமுக-அதிமுகவை விட அதிக ஓட்டுக்களை பெற்றிருப்பதாக பாமகவினர் கூறியுள்ளனர்.

18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் லோக்சபா தேர்தல் ஆனது தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையில் நிறைவடைந்துள்ளது.

Lok Sabha Election 2024 pmk Anbumani Ramadoss Soumya Anbumani Narendra Modi 2024 pmk

ஜூன் ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் நிலையில் மூன்றாவது முறையாக பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் இருந்தாலும், அவர்களது நம்பிக்கை பலித்திருந்தாலும், கூட்டணி ஆட்சி தான் அமைந்துள்ளது. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதே தங்கள் இலக்கு என பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் கூறிய நிலையில், நிதிஷ், சந்திரபாபு நாயுடுவின் தயவில் ஆட்சியைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பலமாக இருந்த பல மாநிலங்களில் பாஜக படுதோல்வியைச் சந்தித்த நிலையில், தமிழகத்திலும் பாஜக படு தோல்வியை தழுவியது. பாஜகவைப் பொறுத்தவரை ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்த எல்.முருகன் , பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தேர்தலில் களம் கண்டனர். இதனால் தமிழகத்தில் இருந்து இவர்களில் ஒருவர் நிச்சயமாக மத்திய அமைச்சரவையில் இடம் பெறப்போவது உறுதி என கூறினர் பாஜகவினர். ஆனால் அவர்கள் அனைவருமே படுதோல்வியை சந்தித்தனர்.

அவர்களுக்கு அடுத்தபடியாக பாமகவுக்கு தருமபுரியில் நல்ல செல்வாக்கு இருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி தேர்தல் அரசியலில் குதித்தார். இதற்கு முன்பாக பசுமைத்தாயகம் அமைப்பின் மூலமாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளை களம் கண்டு வந்த சௌமியா முதன்முறையாக தேர்தல் களத்தில் இறங்கினார்.

அன்புமணியின் மகள்கள் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர் . மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களும் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தனர். தர்மபுரி தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பாஜகவினரும் பாமகவினரும் நம்பினர். வாக்கு எண்ணிக்கையின் போது அதனை மெய்யாக்கும் வகையில் பல சுற்றுகளில் செளமியா அன்புமணி முன்னணியில் இருந்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்த நிலையில், நேரம் செல்ல செல்ல திமுக வேட்பாளர் மணியின் கை ஓங்கியது.

பல சுற்றுகளில் பின் தங்கி இருந்த தர்மபுரி தொகுதி திமுக வேட்பாளர் மணி இறுதியில் 21 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் தனி தொகுதி, மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால் நம்பிக்கையுடன் சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டார். பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக வேட்பாளர் மணியை விட சௌமியா அன்புமணி அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.

அதே நேரத்தில் பாலக்கோடு மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிகளில் பாமகவை விட திமுக வேட்பாளர் மணிக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. இந்த நிலையில் அரூர்( தனி) சட்டப்பேரவை தொகுதி தான் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய அரூர் தனி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு அதிக அளவில் சென்றிருக்கிறது. அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் மணிக்கு 86 ஆயிரத்து 850 வாக்குகள் கிடைத்த நிலையில் சௌமியா அன்புமணிக்கு 46 ஆயிரத்து 175 வாக்குகள் கிடைத்தது.

Lok Sabha Election 2024 pmk Anbumani Ramadoss Soumya Anbumani Narendra Modi 2024 pmk

இதன் காரணமாகவே சௌமியா அன்புமணி தோல்வியை தழுவினார். இந்த நிலையில் இந்த தங்களுக்கு வருத்தம் அளிக்கும் நிகழ்வு என்றாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு பெரும் வெற்றி தரும் மாவட்டமாக தர்மபுரி இருக்கும் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். அதாவது பாலக்கோடு தொகுதியில் திமுக 71 ஆயிரம் வாக்குகளும் பாமக அறுபதாயிரம் வாக்குகளும் பெற்றது. பெண்ணாகரத்தில் திமுக 64 ஆயிரம் வாக்குகளை பெற்ற நிலையில் பாமகவோ 76 ஆயிரம் வாக்குகளை பெற்றது. தர்மபுரியில் திமுக 66,000 வாக்குகளையும் பாமக 79,000 வாக்குகளை பெற்றிருந்தது.

பாபிரெட்டிப்பட்டியில் திமுக 73 ஆயிரம் வாக்குகள் பெற்ற நிலையில் பாமக 82,000 வாக்குகள் பெற்றது. மேட்டூரில் திமுக 67 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ள நிலையில் பாமக 63 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது. இதன் மூலம் பென்னாகரம், தர்மபுரி,பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக- திமுக வேட்பாளர்களை விட பாமக அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது. மேட்டூரில் கிட்டத்தட்ட திமுகவுக்கு இணையான வாக்குகளை பாமக பெற்றுள்ளது. மேலும் இந்த தொகுதிகளில் அதிமுகவும் ஓரளவு வாக்கு வங்கியை கைப்பற்றி இருப்பதாலேயே சௌமியாவின் வெற்றி வாய்ப்பு சற்றே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதே நேரத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்தினால் பாட்டாளி மக்கள் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பிக்கையை தெரிவித்திருக்கின்றனர் அக்கட்சியினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+