பயணிகள் கவனத்திற்கு.. பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
சென்னை : பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் சிறப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப் பட இருக்கிறது. இதற்காக சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் வெளியூர் பயணத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இதற்கென சுமார் 7ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. நாளொன்றிற்கு ஆயிரத்தும் அதிகமான சிறப்புப் பேருந்துகள் பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப் பட்டு வருகின்றன.
கோயம்பேட்டில் இருந்து மட்டும் 4655 பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. கடந்த 3 நாட்களாக சிறப்பு பஸ்களில் கூட்டம் இல்லை. ஆனால் இன்று மாலை முதல் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கலுக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் இன்றும் நாளையும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரப்பக்கூடும் என்பதால் விரிவான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

முன்பதிவு மையங்கள்...
பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையத்தில் 25 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. அங்கு பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணம் செய்ய ஏதுவாக வசதிகள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. முன்பதிவு செய்த பயணிகள் தவிர மற்றவர்கள் பயணம் செய்ய உதவும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நடைமேடைகள்...
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 1, 2 நடைமேடையில் குறுகிய தூரம் செல்லக்கூடிய பகுதிகளுக்கான பஸ்கள் நிறுத்தப்படும். முன்பதிவு செய்யாத பயணிகள் இங்கு சென்று பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 3, 4, 5 மற்றும் 6 ஆகிய நடைமேடையில் இருந்து முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

வேளாங்கண்ணி, தஞ்சாவூர்...
3-வது பிளாட்பாரத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி போன்ற பகுதிகளுக்கும் 4-வது நடைமேடையில் கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

திருச்சி, சிவகங்கை...
5-வது நடைமேடையில் திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், அறந்தாங்கி, தேனி, கம்பம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக நடைமேடைகள்...
6-வது நடைமேடையில் இருந்து மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, பம்பை ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. இவை தவிர 7, 8, 9 ஆகிய தற்காலிக நடைமேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்யாத பயணிகள்...
இங்கிருந்து முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 7-வது நடை மேடையில் இருந்து கும்பகோணம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை...
8-வது நடைமேடையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மார்க்க பகுதிகளுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. 9-வது பிளாட்பாரத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி போன்ற பகுதிகளுக்கு முன்பதிவு செய்யாத பயணிகளை ஏற்றி செல்ல வசதி அளிக்கப்பட்டுள்ளது.

டோக்கன் முறை...
முன்பதிவு செய்யாத பயணிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய டோக்கன் முறை கையாளப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் டோக்கனை பெற்றுக் கொண்டு பஸ்களில் ஏறிக் கொள்ளலாம். டோக்கனில் பஸ் தடம் எண், இருக்கை எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் உள்ள எண் பஸ்சின் முகப்பு கண்ணாடி பகுதியில் ஒட்டப்பட்டு இருக்கும்.

விசாரணை மையம்...
மேலும் 8 போக்குவரத்து கழகங்கள் சார்பில் விசாரணை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. பயணிகளின் சந்தேகங்களுக்கு அங்கு விளக்கம் அளிக்கப்படும்.

கண்காணிப்பு கேமராக்கள்...
பயணிகள் கூட்டத்தை கண்காணித்து அவர்களை நெரிசலின்றி பயணம் செய்ய ஏதுவாக 18 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

வாக்கிடாக்கி...
மேலும் போக்குவரத்து கழக ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வாக்கிடாக்கி வழங்கப்பட்டு கூட்ட நெரிசலை குறைக்கவும் முறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications