சீன பட்டாசா?!- கண்டறிய முடியாமல் அலறும் தனிப்படையினர்
நெல்லை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சீன பட்டாசுகளை இனம் காண முடியாமல் தனிப்படையினர் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை ஓட்டி இந்த ஆண்டு பட்டாசு விற்பனை கடந்த 10 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசு விலை உயர்ந்து விட்டது. இதனால் மலிவு விலையில் கிடைக்கும் சீன பட்டாசுகளை தமிழகத்தில் சில வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் சீன பட்டாசுக்கு தடை விதித்திருந்தாலும் சில கடைகளில் மறைமுகமாக விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளன.
இதையடுத்து தமிழக அரசு சீன பட்டாசுகள் விற்பனையை தடுக்க மாவட்டம் தோறும் தனிப்படைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் தாசில்தார், தீயணைப்பு துறை அதிகாரி, மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அனைத்து பட்டாசு கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தனிப்படையினர் தீவிரமாக சோதனை நடத்தியும் சீன பட்டாசுகளை பிடிக்க முடியவில்லை.
இதற்கு காரணம் குழுவில் இருக்கும் தனிப்படையினருக்கு சீன பட்டாசு எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை. பட்டாசு பெட்டிகளின் மேல் சீன எழுத்துகள் இருந்தால் மட்டுமே அது சீன பட்டாசு என்று நினைத்து சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தனிப்படையினர் பட்டாசு பெட்டிகளின் மேல் டிராகன் படம் இருந்தால் அது சீன பட்டாசு என கணித்து சோதனை நடத்துகின்றனர்.
பட்டாசுகளை பிரித்தோ அல்லது வெடித்து பார்த்தோ பிடிக்க முடியாமல் தனிப்படையினர் திணறி வருகின்றனர். இதுகுறித்து தனிப்படையை சேர்ந்த சிலர் கூறுகையில், "இறுதி நாட்களில் இதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications