4 மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு திமுக நிர்வாகி வெட்டிக் கொலை.. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்!
செங்கல்பட்டு: தாம்பரம் அருகே திமுக நிர்வாகியை நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை பிடிக்க 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராவமுதன். இவர் திமுக காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார். அதற்கு முன்னதாக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் ஆராவமுதன் பொறுப்பு வகித்துள்ளார்.

இன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் மேம்பாலம் அருகில் படப்பை செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டிருந்த புதிய பேருந்து நிறுத்தத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தனது காரில் நேற்று இரவு வந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் ஆராவமுதன் வந்த காரின் மீது நாட்டு வெடி குண்டை வீசி தாக்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஆராவமுதனை, அடையாளம் தெரியாத கும்பல் சுற்றி வளைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்து கை துண்டான நிலையில் சாலையில் ரத்த வெள்ளத்தில் ஆராவமுதன் சாய்ந்தார். பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆட்டோ மூலம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணிவாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர். உயிரிழந்த திமுக பிரமுகர் ஆராவமுதனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பெருமளவில் குரோம்பேட்டை மருத்துவமனையில் குவிந்ததால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து குரோம்பேட்டை பல்லாவரம் தாம்பரம் காவல் நிலையங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் குரோம்பேட்டை மருத்துவமனை ஆகிய இடங்களையும் பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டனர். அமல்ராஜ் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
ஆளுங்கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 மாதங்களாக திட்டம் தீட்டி ஆராவமுதனை கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காட்டாங்கொளத்தூரில் திமுக நிர்வாகியை வெட்டிக் கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொலையாளிகளை பிடிக்க 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications