சிக்குபுக்கு சிக்குபுக்கு.. ஊட்டி-கேத்தி ஸ்பெஷல் ரயில்.. சமோசா, சூப் சாப்பிட்டபடி பயணிகள் உற்சாகம்!
ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது.
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஊட்டி மலை ரயிலில் பயணம் மேற்கொள்வது மறக்க முடியாத அற்புத பயணமாகும். இதனால்தான் நீலகிரிக்கு வரும் அனைவருமே ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் விருப்பப்படி சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு, கடந்த மாதம் முதல், சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும், 16ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயங்கும். இதனிடையே நீலகிரி மலை ரயிலில் ஆய்வு நடத்தப்பட்டு, கிராம சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் நிலக்கரி நீராவி இன்ஜின் மூலம் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. 'ஊட்டி - கேத்தி இடையே, வார இறுதி நாட்களில், வட்ட சுற்றுலா ரயில் இயக்கவும் முடிவு திட்டமிடப்பட்டது.
அதன்படி, நேற்று முதல் இந்த ரயில் இயங்க தொடங்கியது. இதில், 16 இருக்கைகள் கொண்ட ஒரு முதல் வகுப்பு, 36 இருக்கைகள் மற்றும் 30 இருக்கைகள் கொண்ட, இரு இரண்டாம் வகுப்பு,' என, 82 இருக்கைகளுடன் மூன்றாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன. இந்த சிறப்பு ரயில் ஊட்டியில் இருந்து மதியம், 2:30 மணிக்கு புறப்பட்டு கேத்தியை, 3:00 மணிக்கு ரயில் சென்றடையும்; மதியம், 3:30 மணிக்கு புறப்பட்டு மாலை, 4:00 மணிக்கு ஊட்டிக்கு வந்தடையும். இதில் முதல் வகுப்பிற்கு, 400 ரூபாய்; இரண்டாம் வகுப்பிற்கு, 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பயணிக்கும், 'சமோசா, வெஜிடேபிள் சூப், ரயில்வே சின்னம் பொறித்த தொப்பி, நீலகிரி மலை ரயில் குறித்த கையேடு, பேப்பர் பை' ஆகியவை வழங்கப்படுகின்றன. ஊட்டி ரயில் நிலையத்தில் உற்சாகத்துடன் கிளம்பிய சுற்றுலா பயணிகள் வழிநெடுக தேயிலை தோட்டங்கள், பச்சை புல்வெளிகள், மடிப்பு மடிப்பான காய்கறி தோட்டங்கள் என நீலகிரி அழகை ரசித்தவாறே சென்றனர்.
பர்னல் மற்றும் லவ்டேல் பகுதிகளிலுள்ள குகை பாதையில் ரயில் செல்லும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முன்னதாக, ராஜ்ய சபா உறுப்பனர் கே.ஆர்.அர்ஜூணன் சுற்றுலா பயணிகளுக்கு சால்வை.அணவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றார். மிகவும் மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் ராஜ்ய சபா உறுப்பினருடன் செல்பி எடுத்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications