ஜெ.,நலம் பெற... அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2500 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
தேனி: முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனியில் இன்று 25 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்ய உள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் தொடர்ந்து பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடையை வேண்டி, தேனியில் இன்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 25 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்துகின்றனர். புளேந்திரபுர விளக்கு என்ற இடத்தில் பால்குடம் ஊர்வலம் தொடங்குகிறது. அங்கிருந்து சென்று வீரபாண்டி கோவிலில் வழிபாடு செய்கிறார்கள்.
தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளில் இருந்தும் 25 ஆயிரம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நேற்றே சில்வர் குடமும், சேலையும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2008 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் பால்குடம் ஏந்தி பேரணியாகச் சென்ற பெண்கள், பெரிய மாரியம்மன் கோயிலில் பாலாபிஷேகம் செய்து ஜெயலலிதா பூரண நலன் பெற வேண்டும் என வழிபட்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications