சுதந்திரதினம்: தமிழகத்தில் 433 கோயில்களில் வடை, பாயசத்துடன் விருந்து
சென்னை: சுதந்திரத் தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 433 கோயில்களில் சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் நடைபெறும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
" இந்திய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நிதி வசதியுள்ள திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது.
இவ்வாண்டு முதல்வரி ஆணையின்படி மாநிலத்தில் 433 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி சிறப்புடன் நடைபெறவுள்ளது.
சென்னையில் சட்டப்பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சென்னை மாநகர மேயர் ஆகியோர் முதலமைச்சரின் ஆணையின்படி கீழ்க்கண்ட திருக்கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

சென்னை கோவில்கள்
திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், ராயப்பேட்டை அருள்மிகு சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில், கே.கே.நகர் அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில், சென்னை திருவேட்டீஸ்வரன்பேட்டை அருள்மிகு திருவேட்டீஸ்வரர் கோயில், நுங்கம்பாக்கம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் விருந்து அளிக்கப்படும்.

மயிலாப்பூர் கோவில்கள்
மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயிலில், அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயில், , தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தம்புசெட்டி தெருவில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை அ/மி. கமடேஸ்வரர் திருக்கோயிலில் விருந்து அளிக்கப்படுகிறது.

மாங்காடு காமாட்சியம்மன்
அடையாறு அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில், பாடி அருள்மிகு திருவல்லீசுவரர் திருக்கோயில், வில்லிவாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலில் விருந்து அளிக்கப்படுகிறது.

கந்தசாமி திருக்கோவில்
மேற்கு தாம்பரம் அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோயில், மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் உள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில், கோயம்பேடு அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், சென்னை ராசப்பசெட்டித்தெருவில் உள்ள அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், கீழ்பாக்கம் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோயில், சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், பெசன்ட்நகர் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், அண்ணாநகர் அருள்மிகு திருமணியம்மன் திருக்கோயிலில் விருந்து அளிக்கப்படுகிறது.

வடபழனி ஆண்டவர் கோவில்
வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், தங்கசாலையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சென்னை தேவராஜ முதலி தெருவில் உள்ள அருள்மிகு சென்னமல்லீசுவரர் (ம) சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம் அருள்மிகு சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில், வேளச்சேரி அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயிலில் பொது விருந்து நடைபெறும்.

கருமாரியம்மன் கோவில்
திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், அயன்புரம் அருள்மிகு பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில், மாநிலத்தின் இதர மாவட்டங்களில் உள்ள முக்கியத் திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள்
இத்திருக்கோயில்களில் முதல்வரின் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சுதந்திரதினக் கொண்டாட்டம்
இந்திய சுதந்திரத் திருநாளை ஒட்டி நடைபெறும் இச்சிறப்புமிகு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications