திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. பக்தர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்.. முழு விவரம் இதோ!
சென்னை: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் நிலையில், அன்றைய தினம் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

அதன்படி, இக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ராஜகோபுரத்தின் அருகில் பிரம்மாண்டமாக 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜூலை 7ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயிலானது 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் ரயிலானது திருநெல்வேலிக்கு மதியம் 12.55 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலானது பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குரும்பூர் மற்றும் ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில நின்று செல்லும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications