சென்னை, நெல்லையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்! புக்கிங் தொடங்கியது
சென்னை: பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா திருவிழாவைக்காண செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, நெல்லையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை - வேளாங்கண்ணி:
சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு செப்டம்பர் 5ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

இந்த ரயில் மறுமார்க்கத்தில் செப்டம்பர் 6ம் தேதி இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
திருநெல்வேலி - வேளாங்கண்ணி:
திருநெல்வேலியிலிருந்து வேளாங்கண்ணிக்கு செப்டம்பர் 4 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து மாலை 3.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 3.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
இந்த ரயில் மறுமார்க்கத்தில் செப்டம்பர் 5 ம் தேதி இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.35 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications