மகிழ்ச்சி செய்தி.. சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே
Recommended Video

சென்னை: சென்னையில் இருந்து நெல்லை மற்றும், நாகர்கோவிலுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

1) சென்னை எழும்பூர்- திருநெல்வேலி நடுவேயான சிறப்பு ரயில்
ரயில் எண் 06001 சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண ரயில், ஆகஸ்ட் 3, 17, 24 மற்றும் 31ம் தேதிகள் மேலும், செப்டம்பர் 7 மற்றும் 21ம் தேதிகளில் எழும்பூரில் இரவு, 9.50 மணிக்கு கிளம்பி, முறையே மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்று சேரும்.
ரயில் எண் 06002 நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில், நெல்லையில் செப்டம்பர் 2, 9 மற்றும் 23ம் தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லையில் கிளம்பி, மறுநாள் காலை 3.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
இரண்டாம் வகுப்பு ஏசி-1, மூன்றாம் வகுப்பு ஏசி-2, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 12 உள்ளிட்டவை இந்த ரயிலில் இருக்கும்.
தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் ரயில், மேற்கண்ட ரயில் நிலையங்கள் தவிர, மாம்பலம் ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும்.
2) சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்:
ரயில் எண் 06007 ஆகஸ்ட் 7, 14, 28ம் தேதிகள் மற்றும் செப்டம்பர் 4, 11, 18, 25ம் தேதிகளில் சென்ட்ரலில் இரவு 8 மணிக்கு கிளம்பும். மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
ரயில் எண் 06008 நாகர்கோவிலில் ஆகஸ்ட் 8, 22, 29, செப்டம்பர் 5, 12, 19, 26ம் தேதிகளில் மாலை 5 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.
ஏசி முதல் வகுப்பு, 3 ஏசி மூன்றாம் வகுப்பு, 9 படுக்கை வசதி கொண்ட கோச்கள் இதில் உள்ளன. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில், இந்த ரயில் நின்று செல்லும். நாகர்கோவிலில் இருந்து சென்ட்ரல் வரும்போது பெரம்பூரில் கூடுதலாக இந்த ரயில் நிற்கும்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications