கும்பகோணம் மகாமகத் திருவிழா: சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
சென்னை: கும்பகோணம் மகாமகத் தீர்தத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில், விழுப்புரம், சென்னை ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு கட்டணத்துடன் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் பெருவிழா, நாளை மறுதினம் பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மகாமக தீர்த்தவாரி, பிப்ரவரி 22-ம் தேதி, பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள் நடக்க உள்ளது. இதையொட்டி சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து விழுப்புரத்திற்கு கும்பகோணம் வழியாக வரும் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு இயக்கப்பட உள்ளது.
அதேபோல் விழுப்புரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் 22-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் - விழுப்புரம் சிறப்பு ரயில் 21-ம் தேதி இரவு 11 மணிக்கும், விழுப்புரம்- ராமேஸ்வரம் சிறப்பு ரயில்மதியம் 12.30 மணிக்கும் இயக்கப்பட உள்ளது.
மேலும் திருச்சி - சென்னை இடையேயான சிறப்பு ரயில் 20-ம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கும் சென்னை -திருச்சி இடையேயான சிறப்பு ரயில் 23-ம் தேதி காலை 11.10 மணிக்கும் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை துவங்குகிறது என தெற்கு ரயி்ல்வே வெளியிட்டுள்ள செய்திகுறி்ப்பில் தெரிவித்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications