மதுரை, நெல்லை, திருச்சி, கோவைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கிவிட்டதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்சி - சென்னை:
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சியில் இருந்து 9-ந்தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் திருச்சி-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06024), அதேநாளில் இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து 13-ந்தேதி காலை 8.30 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-திருச்சி சிறப்பு ரயில் (06023), அதேநாள் பிற்பகல் 2 மணிக்கு திருச்சி சென்றடையும்.
சென்னை - நெல்லை:
சென்னை எழும்பூரில் இருந்து 11-ந்தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரயில் (06025), மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து 12-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06026), மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மதுரை - சென்னை:
மதுரையில் இருந்து 15-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்படும் மதுரை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06020), அதேநாள் மாலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து 18-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-மதுரை சிறப்பு ரயில் (06019), அதேநாள் பிற்பகல் 3 மணிக்கு மதுரை சென்றடையும்.
கோவை - சென்னை:
கோவையில் இருந்து 15-ந்தேதி காலை 11 மணிக்கு புறப்படும் கோவை-சென்னை சென்டிரல் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06022), அதேநாளில் இரவு 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
மறுமார்க்கமாக சென்னை சென்டிரலில் இருந்து 18-ந்தேதி காலை 9.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-கோவை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06021), அதேநாளில் மாலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications