Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பசுமை தீர்ப்பாயமே பாராட்டிய ஓசோன் படல வரைபடம்... மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிறப்புகள்!

உலக அளவில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொற்றாமரைக்குளம், இசைத்தூண்கள் போல மற்றொரு சிறப்பான விஷயம் ஓசோன் படலம் குறித்து வரையப்பட்டுள்ள ஓவியம் என்று பசுமைத் தீர்ப்பாயமே சுட்டிக்காட்டிய

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் செத்து மடிந்த புறாக்கள் | Oneindia Tamil

    மதுரை : நேற்று நள்ளிரவில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து பக்தர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொற்றாமரைக்குளம், இசைத்தூண்கள் போல மற்றொரு சிறப்பான விஷயம் ஓசோன் படலம் குறித்து வரையப்பட்டுள்ள ஓவியம் என்று பசுமைத் தீர்ப்பாயமே சுட்டிக்காட்டியுள்ளது. அத்தகைய பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து ஒரு அபசகுனமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    தூங்கா நகரம் என்று பெயர்பெற்ற மதுரையின் சிறப்பை உலகறியச் செய்த விஷயத்தில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு முக்கியப் பங்கு உண்டு. வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள இந்த சிவாலயத்தின் பெயரைக் கேட்டாலே முக்தி கிடைக்கும்.
    சிதம்பரம், காசி, திருக்காளஹஸ்தி வரிசையில் முக்கியமான 4வது தலமாக உள்ளது இதன் மற்றொரு சிறப்பு.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

    தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள்

    தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள்

    மன்னர்கள் காலத்தில் மாதங்களின் பெயர்கள் அடிப்படையில் கோவிலின் திருவிழா கொண்டாடப்பட்டதால் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் பெயர்கள் மாசி வீதி,ஆடி வீதி, ஆவணி வீதி என்று தமிழ் மாத பெயர்களிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு அழகிய நுணுக்கங்களைக் கொண்டும் தனித்தனிச் சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ளன.

    கோவிலில் உள்ள சிறப்பான ஓசோன் படலம்

    கோவிலில் உள்ள சிறப்பான ஓசோன் படலம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்று வரையப்பட்டுள்ள இரண்டு ஓவியங்கள் ஓசோன் படலத்தின் சிறப்பை உணர்த்துவதாக பசுமைத் தீர்ப்பாயம் சுட்டிக் காட்டி இருந்தது. இந்த வரைபடத்தில் என்ன சிறப்பு என்றால் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்.

    ககோளம் உணர்த்தும் விஷயம்

    ககோளம் உணர்த்தும் விஷயம்

    ககோளம்: நாம் வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. ஓவியம் உணர்த்தும் உலகு: மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    அன்றைய ஓவியம்

    அன்றைய ஓவியம்

    இன்றைய உலகே அன்றைய ஓவியம்: அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி, புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதி திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி, ஹஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி, மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.

    பூகோள சக்கரம் என்ன சொல்கிறது?

    பூகோள சக்கரம் என்ன சொல்கிறது?

    பூகோள சக்கரம்: இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. உவமையால் உணர்த்தப்படும் உண்மைகள்: பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம். இந்த ஓவியத்தில்தான் சூரிய குடும்பங்களும், வளிமண்டல ஓசோன் அடுக்கு பற்றிய தகவல்களும் சக்கர வடிவில் தீட்டப்பட்டுள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+