நீட் தமிழ் மொழி வினாத்தாளில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. சிபிஎஸ்இ பதிலளிக்க ஹைகோர்ட் கிளை உத்தரவு!
நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி தொடர்பாக பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

மதுரை: நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி தொடர்பாக பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வை, 13 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர்.
தமிழகத்தில் இருந்து மாணவர்கள் 1.07 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.

தேர்வு முடிவுகள்
பலத்த எதிர்ப்புக்கிடையே நடைபெற்ற இந்த நீட் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளை விட ஒரு நாள் முன்கூட்டியே கடந்த 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஸ்பெல்லிங் மிஸ்டேக்
இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் 49 கேள்விகளில் பிழை என டி.கே.ரங்கராஜன் எம்.பி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிபிஎஸ்இக்கு உத்தரவு
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கருணை மதிப்பெண்
மேலும் நீட் தமிழ் மொழி வினாத்தாளில் உள்ள பிழைகளுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications