விஜயகாந்த் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள்... சொல்வது திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சேலம்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பற்றி சில வாரங்களாக வாட்ஸ்ஆப் மற்றும் வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருகிறார்கள் அதை யாரும் நம்பவேண்டாம் அவர், மக்கள் நலக்கூட்டணிக்குத்தான் வருவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் தேர்தல் களம் சூடு கிளப்பிகொண்டிருக்கிறது.

Spreading rumour on DMDK's alliance with DMK, says Thirumavalavan

மக்கள் நல கூட்டணி கட்சியின் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் இன்று காலை சேலம் காந்தி ஸ்டேடியத்திற்கு வந்தனர்.

பின்னர் இவர்கள் இங்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பற்றி சில வாரங்களாக வாட்ஸ்ஆப் மற்றும் வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருகிறார்கள். அவர் தற்போது நேர்காணல் நடத்தி வருகிறார்.

கூட்டணி குறித்து அவர் அறிவிக்கவில்லை. ஆனால் அவர் திமுக கூட்டணிக்கு சென்று விட்டதாக வதந்தியை பரப்புகிறார்கள். அவர் தே.மு.தி.க. மாநாட்டில பேசும் போது நான் யாரையும் முதல்வராக கட்சியை தொடங்கவில்லை. நான் முதலமைச்சராகத்தான் தொடங்கினேன் என கூறி இருந்தார். அவர் தி.மு.க. மற்றும் அ,தி.மு.க. கூட்டணிக்கு செல்லமாட்டார். எங்கள் கூட்டணிக்கு அவர் வரவேண்டும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+