முடிவே இல்லாமல் தொடரும் அட்டூழியம்... தூங்கும் அரசுகள் - புதுகை மீனவர்கள் 4 பேர் மீண்டும் சிறைபிடிப்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த தங்கச்சாமி என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ராமமூர்த்தி, ஜெயபால், வீரா மற்றும் மணிகண்டன் ஆகியோர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 பேரையும் சிறைபிடித்தனர். மேலும் விசைப் படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்த 4 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இலங்கை மீனவர்கள் தங்களை சிறைபிடித்தது குறித்து மீனவர்களில் ஒருவரான ராமமூர்த்தி தனது செல்போன் மூலம் ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து 4 மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications