இருள்சூழ்ந்த நடுக்கடலில் 10 நிமிடம் நீடித்த சரமாரி துப்பாக்கிச்சூடு.. மீனவரின் திகில் அனுபவம்
இலங்கை கடற்படையினர் சுமார் 10 நிமிடம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக இதனை அனுபவித்த மீனவர் ராஜா தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் சுமார் 10 நிமிடம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக இதனை அனுபவித்த மீனவர் ராஜா தெரிவித்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் என மற்றவர்களை அறிவுறுத்திய பிரிட்ஜோதான் இதற்கு பலியானதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இந்திய எல்லைக்குள் நேற்று முன்தினம் இரவு அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரட்ஜோ என்ற 22 வயது மீனவர் பலியானனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் தப்பி கரைசேர்ந்த ராஜா என்ற மீனவர் துப்பாக்கிச்சூடு குறித்த தனது திகில் அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

இரவு 9 மணிக்கு வந்தனர்
நாங்கள் கச்சத்தீவு அருகே இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். இரவு சுமார் 9 மணி அளவில் அங்கு 4-க்கும் மேற்பட்ட அதிவேக ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.

பிரிட்ஜோதான் அறிவுறுத்தியது
அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டபடியே எங்கள் படகை நோக்கி வந்தனர்.
பிரிட்ஜோ தான் இதனை முதலில் பார்த்து, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுடுகின்றனர். அனைவரும் பாதுகாப்பாக மறைந்து கொள்ளுங்கள் என்று எங்களிடம் தெரிவித்தான்.

10 நிமிடம் சரமாரியாக சுட்டனர்
சுமார் 10 நிமிடம் தொடர்ந்து எங்கள் படகு மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

எங்களிடம் பேச முயன்றான்
அவர்கள் சென்றதும் நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது பிரிட்ஜோவின் கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தான். உயிருக்கு போராடிய அவன் எங்களிடம் பேச முயன்றான்.

கரையை நெருங்கும் வரை உயிர் இருந்தது
ஆனால் அவனால் பேச முடியவில்லை. இதேபோல மற்றொரு மீனவரான சரோனுக்கு கால் மற்றும் கைகளில் குண்டு காயங்கள் இருந்தன. அந்த நேரத்தில் எங்களுக்கு பதற்றமாக இருந்ததால் உடனடியாக அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று வேகமாக கரைக்கு திரும்பினோம். கரையை நெருங்கும்வரை பிரிட்ஜோவுக்கு உயிர் இருந்தது. இவ்வாறு அந்த மீனவர் ராஜா கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications